ரஷ்யாவில் வெடித்தது மோதல் - வாக்னர் படையிடம் வீழ்ந்தது முக்கிய நகரம்
ரஷ்ய இராணுவத்தின் கூலிப்படையான வாக்னர் குழு, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதன்படி ரஸ்யாவின் தென்பகுதி நகரமான ரொஸ்டொவ் ஒன் டொன் நகர் வாக்னர் கூலிப்படையினரின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் அங்குள்ள , இராணுவதலைமையகத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
வாக்னர் குழு தலைவரின் சபதம்
Prigozhin’s Wagner latest video (rough translation): “We have control of rostov’s aerodrome to ensure they are striking Ukraine not us. We are not interfering with military ops in Ukraine so if they tell you that Ukrainians had success in counteroffensive it is… pic.twitter.com/t3uaqJxO7o
— Mikhail ?? (@mikhailsaas) June 24, 2023
இதுதொடர்பில் எவ்ஜெனி பிரிகோசின் புதிய ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நாட்டின் இராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும்.
எங்கள் படைகளை ரஷ்ய இராணுவம் கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
மொஸ்கோவின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர்

வாக்னர் கூலிப்படையினர் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் மொஸ்கோவின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். மொஸ்கோ ஆளுநர் அங்குள்ள குடிமக்களை அமைதியாகவும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வலியுறுத்தினார்.
மொஸ்கோ மேயர் செர்கெய் ஸோபியானின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "வாக்னர் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரஸ்டோவ் மற்றும் லிபெட்ஸ்க் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உற்று நோக்கும் அமெரிக்கா

இந்நிலையில் ரஷ்ய நிலவரம் குறித்து உற்று நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டின் என்பிசி செய்திச் சேவைக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான அடம் ஹாட்ஜ், "நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். எங்களின் நட்பு நாடுகளுடனும் இந்த நிலைமை பற்றி ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 18 மணி நேரம் முன்