மாநகரசபை உங்கள் சொத்து அல்ல! மதிவதனியை வார்த்தைகளால் விளாசிய உறுப்பினர்
நல்லூர் ஆலய வெளி வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பில் யாழ். மாநகர சபையில் வாதப் பிரதிவாதங்கள் வலுத்துள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே குறித்த விடையம் தொடர்பில் பின்வரும் கருத்துக்கள் மாநகர சபை உறுப்பினர் உதயசிறியால் தெரிவிக்கப்பட்டது.
உதயசிறியின் கருத்து
வீதித்தடையால் ஏற்பட்டுள்ள சிக்கலால் மக்கள் தனக்கு முறைப்பாடளித்துள்ளதாகவும் எனினும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் உதயசிறியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு பதில் வழங்கிய முதல்வர் மதிவதனி, அவ்வாறான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றால், அலுவலகத்துக்கு அனுப்பி வையுங்கள் என கூறியிருந்தார்.
இதன்போது அவரின் கருத்தை கேட்ட மாநகர சபை உறுப்பினர் கடும் தொனியில் பதில் வழங்கியிருந்ததார்.
நீங்கள் மட்டும் மாநகரசபை இல்லை என்றும், நீங்களும் மக்கள் பிரதிநிதி எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
