சபையில் சிறீதரனை உரையாற்ற விடாமல் குழப்பம்! கொந்தளித்த அர்ச்சுனா
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) உரையாற்றும் போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
நிலையியற் கட்டளையின் படி, சிவஞானம் சிறீதரனுக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதானாலேயே சபையில் இவ்வாறு குழப்பம் ஏற்பட்டது.
ஆளுங்கட்சி உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) மற்றும் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), சபையில் குழப்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலே கடந்த ஒரு நாடாளுமன்ற அமர்வில் தான் வெளியேற்றப்பட்டதாகவும் இப்போது இவ்வளவு பேர் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தியதை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
