மகிந்தவிற்கு தொடரும் கொலை அச்சுறுத்தல் : அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) இன்னமும் கொலை அச்சுறுத்தல் இருப்பதாக பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.
2009 இல் யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணமாக இவ்வாறு அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி (Thissakuttiarachchi) தெரிவித்துள்ளார்.
இறுதிப்போர்
தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்ட அவர், இறுதிப் போரை இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவருக்கான அச்சுறுத்தல் முற்றாக முடிவடையவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் ராஜபக்சவின் பாதுகாப்பை திரும்பப் பெறுவது அல்லது தேர்தலுக்குப் பின்னர் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள், அவரை படுகொலை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அரகலய போராட்டம்
அத்துடன் 2022 அரகலய என்ற காலிமுகத்திடல் (Galleface) போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகம் மீதான தாக்குதலின் போது ராஜபக்சவைக் கொல்லும் திட்டம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலை (Trincomalee) கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே, ராஜபக்ச உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |