தொடரும் துப்பாக்கிசூடு - அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
பதற்றமான சூழ்நிலை
இலங்கையில் பதற்றமான சூழ்நிலைகளை கட்டுப்படுத்த, அதிகப்படியான வலு பயன்படுத்தப்படுமாயின் அது குறித்து விரைவான விசாரணைகள் அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு
அதில், “எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு அதிகரிப்பதால், இயற்கையாகவே பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எனினும், இந்த ஆவேசம் இலங்கையின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யாது.
As petrol lines & power cuts increase, tensions are naturally rising too. But boiling over will not address SL’s urgent needs. I urge authorities to exercise restraint under these difficult circumstances. Any excessive use of force should be quickly investigated.
— Ambassador Julie Chung (@USAmbSL) June 19, 2022
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிகாரிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிகபடியான வலுவை பயன்படுத்தினால், அது குறித்து விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

