சிம்மாசன உரையில் கூறியதை போல் அதிகார பகிர்வினை வழங்கவேண்டும் - தொடரும் போராட்டம்(படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பினை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பூதன் வயல் சந்தியில் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணையுமாறு வலியுறுத்தியும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஸ்டியினை வலியுறுத்தி அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
அதிபருடனான பேச்சுவார்தை
இன்று ஐந்தாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 50 ற்கு மேற்பட்ட மக்கள் கையில் பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபருடனான பேச்சுவார்தையில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரோ அணியில் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிசார்ந்த பிரச்சினைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுவதோடு எல் வலயம் என்ற பெயரில் முல்லைத்தீவில் ஒருபகுதி முழுவதுமாக அபகரிக்கப்பட்டுள்ளது.
சிம்மாசன உரை
மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வினை வழங்கவேண்டும் என அதிபர் சிம்மாசன உரையில் கூறியது போல் இதற்கு தீர்வை வழங்குவதாக கூறியுள்ளார்.
அதனை மையப்படுத்திதான் இந்த பேச்சுவார்தையும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரோ கொள்கையுடன் கட்சி பேதம் மறந்து மக்களுக்காக பேச்சில் கலந்துகொள்ளவேண்டும் என கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
