சர்ச்சைக்குரிய 6 ஆம் தர கற்றல் தொகுதி: இடைநீக்கப்படவுள்ள அதிகாரிகள்!
சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதிகளைத் தயாரிப்பதில் ஏற்பட்ட பிழைகள் தொடர்பில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, குறித்த சர்ச்சைக்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் குழுவின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினருள் இரு உயரதிகாரிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்புடைய அறிக்கை 17 ஆம் திகதி நடைபெற்ற தேசிய கல்வி நிறுவனத்தின் விசேட நிர்வாகக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அங்கு இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
இவ்வாரம் மீண்டும் நிர்வாகக் குழு கூடவுள்ளது நிலையில் அங்கு விசாரணை அறிக்கையில் உள்ள பிற விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
எனினும், அந்த விவாதங்களுக்கு முன்னர் பொறுப்பானவர்களின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய தொகுதிகளைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒழுங்கற்ற நடத்தை மற்றும் அலட்சியம் காரணமாக இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது என்பதை ஆரம்ப விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |