வெனிசுலா - கனடா கிரீன்லாந்தை ஆக்கிரமித்த அமெரிக்கா! ட்ரம்ப்பின் புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை...
வெனிசுலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (ஏஐ) புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்மை புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
வெனிசுலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
சமுக வலைதள புகைப்படம்
ட்ரம்ப் தனது சமுக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ட்ரம்ப் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அவர் அருகில் உள்ள வரைபடத்தில் வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
திகைப்புடன் கேட்கும் உலகத் தலைவர்கள்
இத்துடன், அந்தப் புகைப்படத்தில் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் ஜனாதிபதி ட்ரம்ப் பேசுவதைத் திகைப்புடன் கேட்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை கொண்ட நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, கனடா நாட்டை அமெரிக்காவின் புதிய மாகாணமாக இணைக்கப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |