இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickramasinghe) முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் (Chandrika Kumaratunga) இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் இந்தோனேசியாவுக்கான பயணத்தின் போது குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.
அதிபர் தேர்தல்
எனினும் அங்கு பேசப்பட்ட விடயம் குறித்து தகவல்கள் இரகசியாகமாக பேணப்பட்டுள்ள நிலையில், அதிபர் ரணிலுடன் மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, அனுர யாப்பா உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் சென்றுள்ளது.
குறித்த நால்வரும் பண்டாரநாயக்க ஆதரவாளர்கள் என்ற வகையில் அண்மைக்காலம் வரை முக்கிய நபர்களாக இடம்பிடித்திருந்த நிலையில் இவர்களுக்கு மேலதிகமாக ரணில் விக்ரமசிங்கவுடன் நிமல் லான்சாவும் இந்த பயணத்தில் இணைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், உலக நீர் தினத்தில் பங்கேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவுக்குச் செல்வது தொடர்பில் ஆரம்பம் முதலே அரசியல் அவதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |