பப்புவா நியூகினியாவில் பாரிய நிலச்சரிவு: 100இற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்!
பப்புவா - நியூகினியாவில் (Papua New Guinea) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு (Port Moresby) வடமேற்கே சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் (Kaokalam) கிராமத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
மீட்பு பணி
எனினும் தற்போதைய மதிப்பீடுகளின் படி 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும், மண்ணுக்குள் புதையுண்ட உடல்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |