யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் அதிபர் ரணில்
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (24) திறந்து வைத்தார்.
மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யாழ்ப்பாணத்தை (Jaffna) வந்தடைந்துள்ளார்.
இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (Jaffna Central College) மைதானத்தில் வந்திறங்கியுள்ளார்.
அதிபர் ரணிலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்
அதிபர் ரணில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைப்பதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.
இதேவேளை அதிபரின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு யாழ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |