அதிபர் ரணிலின் வடக்கு விஜயம்: முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள டக்ளஸ்
Douglas Devananda
Ranil Wickremesinghe
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Sathangani
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
அது தொடர்பான முன்னேற்ற ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் அலுவலகத்தில் துறைசார் தரப்பினர்களுடன் இன்று (17.05.2024) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார்.
இடங்களைப் பார்வையிட்டார்
இந்த நிலையில், அதற்குரிய முன்னேற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டுள்ளார்.
அதன்படி அதிபர் கலந்துகொள்ளவுள்ள நிகழ்வுகள் இடம்பெறவுள்ள இடங்களையும் இன்றையதினம் (17) நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி