அஸ்வெசும வழங்கும் நாளில் மதுக் கடைகளில் அதிகரிக்கும் விற்பனை
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் பயணாளர்கள் சார்பில் புதிய விசனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அஸ்வெசும நலத்திட்டம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையாகும்.
இந்நிலையில் இன்று வழங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் 89 இலட்சத்து 3,75 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஸ்வெசுமா (Aswesuma) நலத்திட்டப் பணம் வழங்கப்படும் நாளில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது என்று கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுபானத்திற்கு செலவிடுகின்றனர்
கடை உரிமையாளர்கள் கூறுவதாவது: அஸ்வெசும தொகை பெறும் நாளில், வழக்கமான நாட்களுடன் ஒப்பிடுகையில் வருமானம் பெரிதும் உயர்கிறது.

இந்த நிலை கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் காணப்படுகிறது. அஸ்வெசும நிதி பெறும் பலர், குடும்பச் செலவுகளைப் பொருட்படுத்தாமல் அந்தத் தொகையை மதுபானத்திற்கு செலவிடுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
அவர்களுக்கு, அந்த நபர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களின் வருமானத்தின் மூலத்தைக் குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் எழும் கேள்விகள் இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், நலத்திட்ட நிதியின் பயனுள்ள பயன்பாடு குறித்தும் குடும்பங்களின் பொருளாதார நிலை மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்தும் பல்வேறு தரப்புகளில் விவாதங்கள் எழுந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |