கூந்தல் அடர்த்தியாக வளர முருங்கை இலை ஹேர் பேக்: எளிய வீட்டுக் குறிப்பு
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
🛑 தேவையான பொருட்கள்
- முருங்கை இலை - 2 கைப்பிடி
- தண்ணீர் - சிறிதளவு

🛑 பயன்படுத்தும் முறை
- முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
- பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
- இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்