தப்பிச் செல்ல முயன்று கை, கால்களை முறித்து கொண்ட முக்கிய குற்றவாளி
மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது திலின சம்பத் எனப்படும் வாலஸ் கட்டாவின் கால்கள் மற்றும் ஒரு கையில் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் தற்போது மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதன்படி, நேற்று (09) இரவு 9.15 மணியளவில், சந்தேக நபர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, தனது கைவிலங்குகளை கழற்றிவிட்டு நான்கு அதிகாரிகளுடன் கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.
அதிகாரிகளுடன் மோதல்
கழிப்பறைக்குச் செல்லும்போது, சந்தேகநபர் அதிகாரிகளைத் தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்காரணமாக அவரது இரண்டு கால்கள் உடைந்துள்ளதாகவும், ஒரு கை முழைங்கையுடன் முறிந்துள்ளதாகவம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தேக நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில், பலத்த காவல்துறை பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
