ரணிலுடன் டுபாய் சென்ற கிரிக்கெட் வீரர்! கிளம்பியது புதிய சர்ச்சை
டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP28) பங்கேற்பதற்காகச் சென்ற இலங்கைக் குழுவுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சி ஆலோசகருமான மஹேல ஜெயவர்தன பங்கேற்றுள்ளார்.
துபாயில் சனிக்கிழமையன்று COP28 இல் காலநிலை நீதி மன்றத்தின் (CJF) தொடக்க விழாவில் ஜெயவர்தன கலந்துகொண்டுள்ளமை பதிவாகியது.
இந்நிகழ்வு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கைப் பிரதிநிதி
ஜயவர்தன அதிபர் தூதுக்குழுவில் ஒரு அங்கமாக இருந்ததாகவும், ஆனால் அங்கு செலவதற்கு அவர் தனியாக நிதியளிக்கப்பட்டதாகவும் அதிபர் அலுவலக அதிகாரியொருவர் கூறினார்
இந்தநிலையில், COP 28 இல் இலங்கைப் பிரதிநிதிகள் நடத்திய நிகழ்வில் தான் கலந்து கொண்டதாகவும் ஆனால் தான் இலங்கைப் பிரதிநிதியாக பங்கேற்கவில்லையெனவும் மஹேல தெரிவித்துள்ளார்.
தான் நிலைபேறுக்கான ஐ.நா தூதுவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |