பதுளை பொது வைத்தியசாலையில் 15 வைத்தியர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா உறுதி
Corona
People
Doctors
Badulla
SriLanka
Badulla General Hospital
By Chanakyan
பதுளை பொது வைத்தியசாலையில் 15 வைத்தியர்கள் உட்பட 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 9 வைத்தியர்களில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரு தாதிகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர் ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
