கனடாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 96 பேர் உயிரிழப்பு!
corona
canada
kills
outbreak
96
By Vasanth
கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,022பேர் பாதிக்கப்பட்டதோடு 96பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 97ஆயிரத்து 756பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 20ஆயிரத்து 609பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 46ஆயிரத்து 417பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஏழு இலட்சத்து 30ஆயிரத்து 730பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி