பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர், சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளையும் கொண்டு, இது சம்பந்தமாக பின்னறிவிப்பு மற்றும் ஆய்வு செய்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் எடுக்க வேண்டிய தீர்மானங்களை உடனடியாக எடுக்குமாறு கோரியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் நவீன் டி சொய்சா (Naveen D. Zoysa) தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரிப்பை காட்டுவதால், தொடர்ந்தும் பரவுவதை தடுக்க தேவையான முடிவுகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

