வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: அம்பலமாகும் மோசடிகள்
இஸ்ரேலினால் இலங்கைக்கு வழங்கிய வேலை வாய்ப்புகளுக்கு இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமாத்திரமல்லாமல், இஸ்ரேலின் வேலை செய்வதற்காகாகவே இலங்கையிலிருந்து ஊழியர்களைக் கோரியுள்ளது, ஆனால் இந்த வேலை வாய்ப்புகள் குறித்து எந்தவிதமான பகிரங்க அறிவிப்புகளையும் வெளியிட வேண்டாம் என்றும் இஸ்ரேலின் டெல் அவிவிலில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டிருந்தது.
அரசியல்வாதிகளின் முகவர்களால்
இதனை சாதகமாக பயன்படுத்தி இஸ்ரேலில் வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களிடம் இருந்து அரசியல்வாதிகளின் முகவர்களால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது.
உண்மையிலேயே வேலைக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர வேறு தொகை செலுத்தப்பட தேவையில்லை என்பதே இஸ்ரேல் அரசாங்கம் இலங்கையுடன் மேற்கொண்ட ஒப்பந்தமாகும்.
ஆனால், புதிய வேலை வாய்ப்புகளிற்கு ஆட்களைத் தேர்வு செய்வது என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் முகவர்கள் அதிக கட்டணத்தை வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகிறது.
மோசடிகள் தொடர்பாக
இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக தெரிவு செய்யப்படுபவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் சுமார் 300,000 ரூபாய் ஆகும், எனவே எதிர்காலத்தில் வேலை தேடுபவர்கள் கூடுதலான கட்டணத்தை செலுத்த தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மோசடிகள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் தெரியப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.