இலங்கையின் பொருளாதார பேரிடர்: அதிகரிக்கும் உணவு நெருக்கடி! வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டு
நாட்டின் ஒன்பது லட்சம் மக்கள் அன்றாட உணவை பெற்றுக்கொள்ளாத நெருக்கடியான நிலையை அடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் மூலம் 17 லட்சம் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களில் ஒன்பது லட்சம் குடும்பங்கள் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவை மட்டும் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தொழில் நிறுவன முடக்கம்
நாட்டில் காணப்படும் ஒன்பது இலட்சத்து முப்பத்தைந்தாயிரம்(935,000) சிறுதொழில் நிறுவனங்களில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம்(280,000) நிறுவனங்கள் மூடப்பட்டத்தால் மக்கள் இவ் வறிய நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடருமாயின் 20 சதவீத சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.