மாந்தை கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வில் அமளி துமளி
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த அமர்வு தவிசாளர் செல்வி இராசையா நளினி தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபையின் செயற்ப்பாடுகளில் இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? நடைமுறைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் தொடர்பாகவும் அமர்வில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டாவது அமர்வு
அத்தோடு முக்கியமாக பிரதேச மக்களின் குடிநீர் சுகாதார வசதிகள் வீதிகள் திருத்தம் தொடர்பாகவும் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலையில் உள்ள உத்தியோகத்தர் பற்றாககுறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதேச சபையினால் உத்தியோகத்தர் நியமித்து சம்பளம் வழங்க சபையின் வருமானம் போதாது என்ற நிலைப்பாடு காணப்படுவதால் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி பிரச்சனைகள்
இதனுடன், பிரதேச சபையின் ஆளுகைக்குற்பட்ட தூர இடங்களுக்கான ஆயுர்வேத வைத்தியசாலையின் நடமாடும் சேவைகளை விஸ்தரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதேச செயலகத்தால் கடந்த காலங்களில் குத்தகைக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதும் பின்னர் அது இல்லாமல் போவதும், பின்னர் அது மாவட்ட செயலக அனுமதிக்கு அனுப்பப்பட்டு அனுமதி கிடைத்த பிற்பாடு பிரதேச சபையின் அனுமதிக்கு வருகின்றதென உறுப்பனர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த செயற்பாடு பிரதேச செயலகம் மக்களையும் பிரதேச சபையினையும் முரண்பட செய்யும் ஒரு நடவடிக்கை என உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த காணி உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட லீஸ் காணிகள் வழங்குவதில் இருந்த பிரச்சனைகள் தொடர்பிலும் உறுப்பினர்களால் உரையாடப்பட்டதுடன் இது தொடர்பில் சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்