தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்றையதினம் (14.11.2024) இடம்பெற்றது.
அதற்கமைய, காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
தபால்மூல வாக்கு
தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
225 ஆசனங்களுக்காக மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிட்ட நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |