மூன்று அமைச்சர்களால் ஆளப்படும் நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை : விஜித ஹேரத் பெருமிதம்
நாடு தற்போது மூன்று அமைச்சர்களால் மாத்திரமே ஆளப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என பெரும் அமைச்சர்கள், குழுவினால் நாட்டை ஆளுவதனால் பல பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று பேரால் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் இன்று மூன்று பேர் ஆட்சி செய்யும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நாடு மிக சிறப்பாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை
ஒரு மாதத்தில் நாட்டை இவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்யும்போது, ஐந்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்தால் ஆசியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இலங்கையை(sri lanka) அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க(anura kumara dissanayake), பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |