யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து : முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணை

Sri Lanka Police Sri Lanka Accident
By Shalini Balachandran Nov 11, 2024 12:07 AM GMT
Report

யாழ், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து காவல்துறையினர் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஜருள் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை (10) வான் - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தினை சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் பரிசோதிக்க முற்பட்ட வேளை சாரதிக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

முதன்முதலாக லெபனானில் கொல்லப்பட்ட சவுதி ஹிஸ்புல்லா தீவிரவாதி

முதன்முதலாக லெபனானில் கொல்லப்பட்ட சவுதி ஹிஸ்புல்லா தீவிரவாதி

விபத்து சம்பவம்

அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் காவல்துறையினர் தாக்கியதாகவும், அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை காவல்துறையினர் தட்டி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினை அடுத்து சனிக்கிழமை சுன்னாகம் காவல் நிலையம் முன்பாக மக்கள் கூடியமையால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, “காங்கேசன்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் காங்கேசன்துறைவீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.


விபத்தினை அடுத்து வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் வாகனத்தை வழிமறித்து சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தினை கேட்டுள்ளனர்.

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதி பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளின் விலையை குறைக்க முடியாது : ரில்வின் சில்வா பகிரங்கம்

எரிபொருளின் விலையை குறைக்க முடியாது : ரில்வின் சில்வா பகிரங்கம்

எதிராக நடவடிக்கை

சம்பவத்தில் விபத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தரும் , கைகலப்பில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக காளிங்க ஜெயசிங்க உத்தரவில், விசேட காவல்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து : முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணை | Investigation Related Chunnagam Accident Incident

காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கின்றன. அவற்றினை அவர்கள் மீற முடியாது.

அத்தோடு மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட குழுவினரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார், நிச்சயமா பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடையில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்

தேர்தல் மேடையில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்