தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு...!
தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 78.4 மில்லியன் மக்களின் தாய்மொழியாக தமிழ் மொழி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்கள்
இதற்கமைய, அதிகளவான தமிழ் பேசும் மக்கள் வாழும் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த தரவரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன், மலேசியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.
எனினும், இதில் தமிழ் மொழியை சுமார் 69 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.
இலங்கை
இதையடுத்து, 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இலங்கையில் தமிழ் மொழியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த நாடென பலராலும் கூறப்படும் இலங்கையில், 15.40 வீதமானோர் தமிழ் மொழியை பேசுவதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மலேசியா
இதனை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள சுமார் 2 மில்லியனுக்கும் அதிமான மக்கள் தமிழ் மொழியைப் பேசுவதாக கூறப்பட்டுள்ளது.
மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகள் மலேசியாவில் பேசப்பட்டாலும் அதிகளவானோர் தமிழ் மொழியை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |