பேரக்குழந்தை பெற்றுதரகோரி மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ள பெற்றோர்(படம்)
இந்தியாவின் உத்தரகாண்ட்டைச் சேர்ந்த பெற்றோர், தங்களது மகனின் படிப்பிற்காக அதிக பணம் செலவழித்ததாகவும், தற்போது அவருக்கு வீடும் கட்டியிருப்பதால் பணத்தட்டுப்பாடு அடைந்துள்ளதாகவும் எனவே தனது மகன் மற்றும் மருமகள் தங்களுக்கு 5 கோடி தரவேண்டும் அல்லது ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தையை பெற்று கொடுக்க வேண்டுமென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த தம்பதியினர் அளித்துள்ள புகார் மனுவில், தங்களது மகனை அமெரிக்காவில் படிக்கவைக்க தம்மிடமிருந்த மொத்த பணத்தையும் கொடுத்ததாகவும், கடன் வாங்கி வீடு கட்டியுள்ளதாகவும், இதனால் பொருளாதாரத்திலும், மனதளவிலும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியதாக கூறியுள்ளனர்.
இதனிடையே, 2016ம் ஆண்டு மகனுக்கு திருமணம் முடிந்த நிலையில் பேரக்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளனர். அதுவும் நடக்காத நிலையில் மனமுடைந்த தம்பதியினர் மகன் மற்றும் மருமகள் தங்களுக்கு 5 கோடி தரவேண்டும் அல்லது பேரக்குழந்தை பெற்று தரவேண்டுமென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தம்பதியினரின் வழக்கறிஞர் இதுகுறித்து பேசுகையில், இந்த வழக்கு நமது சமுதாயத்தின் நிலையை தெளிவாக விளக்குகிறது. பெற்றோர் தங்களது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அளவிற்கு வளர்த்து விடுகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடமிருந்து குறைந்த பட்ச பொருளாதார உதவி பெற கடமைப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
