வசந்த முதலிகேவிற்கு பிணை - கோட்டை நீதிமன்றம் உத்தரவு
Sri Lanka
Sri Lankan political crisis
By Kiruththikan
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஒரு வழக்கில் இருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் இருந்தே வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா சரீர பிணை
இதற்கமைய, அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 36 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி