கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்திற்கு நீதிமன்றின் உத்தரவு
Keheliya Rambukwella
Sri Lanka Magistrate Court
Bribery Commission Sri Lanka
By Sumithiran
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஓகஸ்ட் (13) 2020 முதல் ஜூன் (24) 2024 வரை சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக தெரிவித்து இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒக்டோபர் (01) அன்று மீண்டும் விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் ரூ. 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
ஆவணங்களை ஒப்படைத்த ஆணைக்குழு
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன் அழைக்கப்பட்டபோது, பிரதிவாதி கோரிய பல ஆவணங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் திறந்த நீதிமன்றத்தில் பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி