அல்லைப்பிட்டி சூட்டு சம்பவம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

Jaffna Sri Lanka Police Investigation Gun Shooting
By Sumithiran Feb 11, 2026 04:32 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது காவல்துறை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்

கைதானவர்களுக்கு பிணை

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம்(10) செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அல்லைப்பிட்டி சூட்டு சம்பவம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு | Court Orders Arrest Arrested In Allaipiti Shooting

இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம்(11) புதன்கிழமை நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.

அதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்குபடுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்றச் சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓட்டியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட்ட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினர் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார்

வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு 

அவ்வேளை மண்டைதீவு காவலரணில் நின்ற காவல்துறையினர் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த காவல்துறையினர் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அல்லைப்பிட்டி சூட்டு சம்பவம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு | Court Orders Arrest Arrested In Allaipiti Shooting

ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார். பின்னர் காவல்துறையினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.

வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்ததாக காவல்துறையினர் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

17 வயது ஆவணமும் - 19 வயது அறிக்கையும்! அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் எது உண்மை!

17 வயது ஆவணமும் - 19 வயது அறிக்கையும்! அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் எது உண்மை!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு! சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் எம்பி

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு! சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் எம்பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020