நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!
COVID-19
COVID-19 Vaccine
By Kanna
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 9 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும் 3 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,735 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்