மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
COVID-19
Ministry of Health Sri Lanka
By Kanna
கொரோனா தொற்று உறுதியான மேலும் 108 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 665,847ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மூவர் பலி
இதேவேளை, நாட்டில் மேலும் 03 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(31) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை பதிவான கொரோனா இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,559 ஆக அதிகரித்துள்ளது
நாட்டில் கொரோனாத் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், அதிக கவனம் செலுத்துமாறு மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
