கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!
கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 ஆவது வயதில் காலமானார்.
93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,032 ஓட்டங்களையும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர், வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என இரண்டிலும் அசத்தக்கூடிய பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்ந்தார்.
1958-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த ஆட்டமிழக்காத 365 ஓட்டங்கள், 36 ஆண்டுகள் உலக சாதனையாக நீடித்ததுடன், முதல்தர போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரரும் அவரே ஆவார்.
சகலதுறை ஆட்டக்காரர்
நாட்டிங்ஹாம்ஷையர் கவுண்டி அணிக்காகவும் விளையாடிய இவரது விளையாட்டுச் சேவையைப் பாராட்டி 1975-ல் நைட்ஹுட் பட்டமும், விஸ்டன் அமைப்பால் 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்களில் ஒருவராகவும் கௌரவிக்கப்பட்டார்.

அவரது மறைவிற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும், நாட்டிங்ஹாம்ஷையர் கிளப்பும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |