குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா வரும் கிரிக்கெட் பிரபலம்
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜோன்டி ரோட்ஸ் தனது விடுமுறைக்காலத்தைக் கழிப்பதற்காக அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தென்னாபிரிக்க தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் இவர் தனது விடுமுறையில் அலைச்சறுக்கு (surfing) விளையாட்டில் ஈடுபடுவதற்காக தென்னிலங்கையில் உள்ள ஹிரிகெட்டியாவுக்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது விடுமுறைத் திட்டங்களைப் பகிர்ந்த ரோட்ஸ், அலைச்சறுக்கு (surfing) விளையாட்டில் ஈடுபடவுள்ளதையும் அதில் அதிக ஆர்வம் காண்பிப்பதையும் வெளிப்படுத்தியிருந்தார்.
தன்னுடன் இணைவது நல்லது
இதன் போது, இதற்கு முன்னதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தனது மகள் ஸ்வைரி அஹங்கமாவுடன் அலைச்சறுக்கு விளையாடுவதை தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவேற்றியிருந்தார், குறித்த பதிவிற்கு பதிலளித்த ரோட்ஸ் "அடுத்த வாரம் குடும்பத்துடன் விடுமுறைக்காக ஹிரிகெட்டியாவிற்கு வந்து @KumarSanga 2 முறை உங்களை அலைகளில் இழுக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
Swyree catching waves. So many amazing spots to surf in Sri Lanka. #amazingsrilanka #islandvibes #Ahangama #hoteldeuncles #visitsrilanka pic.twitter.com/vkFeVyUMgM
— Kumar Sangakkara (@KumarSanga2) December 15, 2023
தன்னுடன் இணைவது மிகவும் நல்லது என்று கூறி முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரருக்கு சங்கக்கார பதிலளித்து,அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |