இந்திய நிறுவனத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி
இந்தியன் ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சிபெட்கோ விற்பனை நிலையங்களுக்கு அவர்களது வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதால், தமக்கு நஷ்டம் அதிகரித்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் பெப்ரவரி மாதத்தைப் போன்று கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால் இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு டீசல் லீற்றருக்கு 48.30 ரூபா நட்டம் ஏற்படும் எனவும் ஒரு லீற்றர் பெற்றோல் விலை 15.68 ரூபாவால் நட்டம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே எரிபொருள் விலை அதிகரிப்பு அத்தியாவசியமானது என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விலை அதிகரிப்பு இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
