ஐபிஎல் இறுதிப்போட்டி - களத்தடுப்பை தீர்மானித்தது சென்னை அணி..!
நடப்பு ஐபிஎல் தொடரின் கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணியை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதிப் போட்டி குரஜாத்தின் அஹமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்தது. எனினும் கடும் மழை காரணமாக இந்தப் போட்டி இன்று(ரிசர்வ் நாள்) பிற்போடப்பட்டது.
சாதனையை சமன்செய்யும் இலக்கு
ஐபிஎல் தொடரில் அதிகளவு வாகையர் பட்டத்தை வெற்றிகொண்ட அணியொன்ற சாதனையை சமன்செய்யும் இலக்குடன் சென்னை அணி இன்றைய போட்டியில் களமிறங்குகின்றது.
கிண்ணத்தை தக்க வைக்கும் இலக்குடன் குஜராத் அணி சொந்த மண்ணில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இன்று திங்கட்கிழமையும் மழை காரணமாக போட்டி கைவிடப்படும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி வாகையர் பட்டத்தை வெற்றிகொள்ளும்.
இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை அணியை விட 3 புள்ளிகள் அதிகமாக குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி
இந்த நிலையில், அஹகமதாபாத் நகர் வானிலை சாதகமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தகுதிகாண் போட்டிகள் இரண்டிலும் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை அணி தீர்மானமிக்க இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் அணியை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
மற்றுமொரு வாய்ப்பை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஓப் சுற்றின் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது