ஓய்வை அறிவித்த சென்னை வீரர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபில் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ் அனைத்து வகையான சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சில நாட்களுக்கு முன்பு எனது துடுப்பாட்ட போட்டி வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்துள்ளேன்.
அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
பாப் டூ பிளஸ்சிஸூக்கு நன்றி
சிறுவயதில் இருந்தே தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே குறிக்கோள்.
அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார். இனி எஞ்சியுள்ள எனது வாழ்க்கையில் T20 போன்ற குறுகிய வடிவப் போட்டிகளில் எனது கவனத்தைச் செலுத்த உள்ளேன்.
எனது வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முன்னாள் தலைவர் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி. முதல் முறையாக சர்வதேச அணியில் இருந்து என்னை விடுவித்த பிறகு மீண்டும் என்னை அணிக்குள் கொண்டுவந்ததோடு என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியவர்.
சிறந்த பந்துவீச்சு பிரதி
அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றி கூறுகிறேன். என் தாய், தந்தை மற்றும் எனது சகோதரருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.என தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி உள்ளார்.
இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இவர் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுதான் சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
? NEWS ALERT ? : South Africa all-rounder Dwaine Pretorius has announced his retirement from International Cricket with an immediate effect
— Sports Yaari (@YaariSports) January 9, 2023
"I made one of the toughest decisions of my cricketing career. I have decided to retire from all forms of international cricket" pic.twitter.com/iVP5XFYdE6


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
