தோனியின் அதிரடி முடிவு: சோகத்தில் ரசிகர்கள்
ஐபில் 2024 தொடங்குவதற்கு முன்னதாக தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளார்.
ஐபிஎல் 2024 நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரானது தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். மேலும் ஐபிஎல்லில் 52 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கெய்க்வாட் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று ரி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளதுடன் அவரது மாநில அணியான மகாராஷ்டிராவிற்கு தலைமை வகித்துள்ளார்.
சென்னை அணி உருவாக்கப்பட்டதிலிருந்தே அணியின் தலைவராக தோனியே இருந்துள்ளார். அந்தவகையில் இரு முறை சுரேஸ் ரெய்னா மற்றும் ஜடேஜாவிடம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில் மறுபடியும் தோனியே தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
புதிய தலைவர்
சிஎஸ்கே அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, இதுவரை 250 போட்டிகளில் விளையாடி, 5082 ஓட்டங்களை குவித்துள்ளார்.
135.92 ஸ்ட்ரைக் ரேட், 38.79 சராசரியில் இந்த ஓட்டங்களை அடித்துள்ளார். இதில், 24 அரை சதம் அடங்கும்.
இந்நிலையில் இந்த சீசனுடன் தோனி ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
OFFICIAL STATEMENT: MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad. #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |