சென்னையிடம் மண்டியிட்டது மும்பை
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில்(49 ஆவது போட்டி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
வெற்றியிலக்கு
இதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் நேஹால் வதேரா 51 பந்துகளில் 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில், 140 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டெவோன் கொன்வே 42 பந்துகளில் 44 ஓட்டங்களையும், ருத்ராஜ் கெய்க்வாட் 16 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக மதீஷ பத்திரன தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
