சிறிலங்காவில் சட்டவிரோத மனிதக் கடத்தலை தடுக்க கடுமையான சட்டம்
இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்து சமுத்திர பாதுகாப்பு

அங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், “இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கவனம் செலுத்தி வருகின்றன.
நமது பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் கடற்படை பொறுப்புடன் பாரிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையொன்று தயாரிக்கப்படுகிறது.
இதன்போது பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் குற்றங்கள் ஆகியவை தொடர்பில் இந்த மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுகின்றன.
பொருளாதார ஸ்திரத்தன்மை

இந்த மதிப்பீட்டின்படியே, ஒரு நாடாக நாட்டின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தீர்மானங்கள் எடுக்கும்போது இந்த மதிப்பீடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
முக்கியமாக, சட்டத்தின் ஆட்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாத எந்த நாட்டிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது” - என்றார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்