மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதி வழங்கவில்லை - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
Sri Lanka Economic Crisis
Ceylon Electricity Board
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறவேண்டியது அவசியமாகும்.
இன்று காலை மின்சார கட்டணத்தை 100 வீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அவ்வாறான அனுமதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டண திருத்தம் செய்தால், திருத்த முன்மொழிவை பொதுமக்களிடம் சமர்ப்பித்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி