போராட்டகாரர்களினால் முழுமையாக கைப்பற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்: தற்போதைய நிலை (காணொளி)
பிரதமர் அலுவலகம்
நேற்று இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக பிரதமர் அலுவலகம் போராட்டகாரர்களினால் முழுமையாக கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து தற்பொழுது போராட்டகாரர்கள் பிரதமர் அலுவலகத்தை முழுமையாக ஆக்கிரமித்து அங்கு குழுமி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா அதிபர் உட்பட பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறிலங்கா அதிபர் கோட்டாபய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.
பின்னர் பதில் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தான் நியமிப்பதாகவும் சபாநாயர் மூலம் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பிரதமர் ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பதில் அதிபராக பொறுப்பேற்றக கூடாது என்றும் கூறி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றுவதை தடுக்கும் முகமாக முப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இருப்பினும் அதிகளவான மக்களின் வருகையால் பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது .
இந் நிலையில் பிரதமர் அலுவலத்தின் தற்போதைய நிலையை காண்பிக்கும் காணொளி
