கிடைத்தது இரகசிய தகவல் -கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான முக்கிய அதிகாரிகள்
கொக்கெய்ன், மெத் ஸ்டாம்ப்கள் மற்றும் குஷ் ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு சுங்கப் பரிசோதகர்கள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க மற்றும் தனியார் களஞ்சியசாலை ஒன்றில் கடமையாற்றும் இரு சுங்க பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரகசிய தகவல்
துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சுங்க பரிசோதகர் ஒருவர் நேற்று துறைமுகத்தை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் போதைப்பொருள் கலந்த முத்திரைகள் இருந்ததாக சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார். சந்தேகநபருக்கு போதைப்பொருளை வழங்கிய மற்றைய சுங்க பரிசோதகர் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததாகவும், சந்தேகநபரையும் துறைமுக வளாகத்தில் உள்ள அறையில் வைத்து கைது செய்ததாகவும், அவரிடம் சந்தே குஷ் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக வளாகத்தில் தங்கியிருந்த அறையில், தபால் பொதி வந்த மூன்று வெற்று பார்சல் கவர்கள் இருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் பொதிகள்
மத்திய தபாலகத்திற்கு வரும் போதைப்பொருள் பொதிகளை அவர்கள் கையகப்படுத்தி அதன் உரிமையாளர்களிடம் விடுவிப்பார்களா அல்லது அதற்குள் போதைப்பொருளை கடத்துவார்களா என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சுங்க பரிசோதகர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
