சிறிலங்கா அரசின் தகவல் திணைக்கள முகநூல் பக்கத்தின் மீது சைபர் தாக்குதல்
இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த முகநூல் பக்கம் இன்று பிற்பகலில் இருந்து ஹெக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வரவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இலங்கையின் கணனி குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நடவடிக்கை
அரசாங்கத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் மற்றும் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இது ஹெக் செய்யப்பட்டதினால் பிரவேசிக்கும் பயனர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கூடிய விரைவில் முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சின்த்தக்க தெரிவித்துள்ளார்.
