டித்வா புயலால் நாடளாவிய ரீதியில் 4500 வீடுகள் முழுமையாக சேதம்!
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாடளாவிய ரீதியில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கினால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 1800 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
சேதங்கள்
கண்டி மாவட்டத்தில் 13,044 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து, புத்தளம் மாவட்டத்தில் 573 வீடுகள் முழுமையாகவும் 4696 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் 480 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும் 7291 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகள் முழுமையாகவும், 11,575 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாகவும் 453 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |