மகிந்த தொடர்பில் கோட்டாபயவிடம் நாமல் தெரிவித்த முக்கிய விடயம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Sumithiran
தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அரச தலைவருடனான கலந்துரையாடலின் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரச தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்