புத்த மதத்தின் பெரிய தலைவராக 8 வயது சிறுவன் - கொண்டாட்டத்தில் மக்கள்
United States of America
By Vanan
அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, புத்த மதத்தின் 3ஆவது பெரிய தலைவராக, மதத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10ஆவது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3ஆவது பெரிய தலைவர்
இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ஆம் திகதி நடந்துள்ளது.
இரட்டையர்களில் ஒருவரான இந்தச் சிறுவனின் தந்தை அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
பாட்டி, மங்கோலிய நாடாளுமன்றில் எம்.பி ஆக இருந்துள்ளார்.
தந்தை அல்டன்னர் சின்ச்சுலூன் எனவும், தாயார் மங்க்னசன் நர்மதனாக் என தெரியவந்துள்ளது.
தங்களது நாட்டைச் சேர்ந்த சிறுவன் புத்த மதத்தின் 3ஆவது பெரிய தலைவராக நியமிக்கப்பட்டதை அறிந்த உடன் மங்கோலிய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி