தலாய்லாமாவின் பாலியல் சீண்டல் - பாடகி சின்மயி கடும் கண்டனம் (காணொளி)
திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தம் கொடுக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த காணொளியில், தன் காலில் விழுந்த சிறுவன் ஒருவனின் உதட்டில் தலாய்லாமா முத்தம் கொடுக்கிறார். மேலும், தன் நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவது, அதில் பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் கண்டனம்
தலாய்லாமாவின் இச் செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், " சிறுவனுக்கு தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம். மதம் சார்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் வேட்டையாடுகிறார்கள். அதில் தலாய்லாமாவும் ஒருவர் என்று நினைக்கும் போது ஏமாற்றமடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Nothing in that video was innocent or playful. https://t.co/YNKtA6z57j
— Chinmayi Sripaada (@Chinmayi) April 10, 2023
