பாலியல் கல்வியை அத்தியாவசியமாக்க வேண்டும் - சபையில் டயானா..!
Parliament of Sri Lanka
Sexual harassment
Child Abuse
By Dharu
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது அத்தியாவசியம் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இன்று(9) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,
“இன்றைய மாணவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
சமூக பிரச்சினை
சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என தெரியாது.
சில மாணவர்கள் இந்த பிரச்சினைகள் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக பிரச்சினைகளால் உள்வாங்கப்படுகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும்." என தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்