புறக்கணிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர: ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தகவல்
Sajith Premadasa
Sri Lankan Peoples
Samagi Jana Balawegaya
Dayasiri Jayasekara
By Dilakshan
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தயாசிறி ஜயசேகர தனது எதிர்கால அரசியலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி
அத்தோடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி